தசரா படத்துக்கு 36 ‘கட்’: சென்சார் போர்டு கிடுக்கிப்பிடி

ஐதராபாத்: நானி நடித்துள்ள தசரா படத்துக்கு 36 கட் கொடுத்திருக்கிறது சென்சார் போர்டு. ஜெர்சி, அன்டே சுந்தரனிகி, ஷியாம் சிங்க ராய் படங்களின் தொடர் வெற்றிகளுக்கு பிறகு புகழின் உச்சிக்கு சென்றிருக்கிறார் நானி. தனது திறமையான நடிப்பாற்றலால் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் அவர் நடித்திருக்கும் பான் இந்தியா படமான தசரா வரும் 31ம் தேதி ரிலீசாகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாகும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இதில் ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். காந்த் ஒடேலா இயக்கியுள்ளார்.

இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், வன்முறை, ஆபாச வசனங்கள் ஆகியவற்றின் காரணமாகவும் மது குடிப்பது, சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்காகவும் 36 இடங்களில் காட்சிகளை வெட்ட உத்தரவிட்டுள்ளனர். சில இடங்களில் வசனங்களை மியூட் செய்யவும் கூறியுள்ளனர். சில வசனங்களை அனுமதிக்கும்படி இயக்குனர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதை ஏற்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர். படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: