‘மல்லி பெல்லி’யில் நரேஷ் பாபு, பவித்ரா ேலாகேஷ் காதல் வாழ்க்கை

ஐதராபாத்: பலமொழிகளில் அதிகமான படங்களை இயக்கியவர் என்று, உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர், மறைந்த நடிகை விஜயநிர்மலா. தமிழில் பல படங்களில் அவர் நடித்திருந்தாலும், ‘எலந்த பழம்’ என்ற பாடல் அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இவர், மறைந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா வின் 2வது மனைவி. இவர் களது மகனும், தெலுங்கு நடிகருமான நரேஷ் பாபு, கன்னட நடிகை பவித்ரா லோகேஷை சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்டார். நரேஷ் பாபு ஏற்கனவே 3 முறை திருமணமானவர். அவருக்கு 63 வயது ஆகிறது. பவித்ரா லோகேஷும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு 44 வயது ஆகிறது. இந்நிலையில், நரேஷ் பாபுவுக்கு ரூ.1,500 கோடி சொத்துகள் இருக்கின்றன என்றும், அதை சதிவலை பின்னி அபகரிக்கும் திட்டத்துடன் நரேஷ் பாபுவை பவித்ரா லோகேஷ் திருமணம் செய்துள்ளார் என்றும், பவித்ரா லோகேஷின் முதல் கணவர் சுசேந்திர பிரசாத் என்பவர் கடுமையாக குற்றம் சாட்டினார்.  இந்நிலையில் நரேஷ் பாபு, பவித்ரா லோகேஷ் ஜோடியின் காதல் மற்றும் திருமண வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும்

படத்துக்கு ‘மல்லி பெல்லி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அவர்கள் நடிக்கின்றனர். எம்.எஸ்.ராஜு இயக்குகிறார். விஜய கிருஷ்ணா மூவிஸ் சார்பில் நரேஷ் பாபு தயாரிக்கிறார்.  இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கில் பவித்ரா ேலாகேஷ் வெட்கத்துடன் கோலமிட, நரேஷ் பாபு ரசிப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இப்படத்தில் ஜெயசுதா, சரத்பாபு, அனன்யா நாகல்லா, வனிதா விஜயகுமார், ரோஷன், ரவிவர்மா, அன்னபூர்ணா நடிக்கின்றனர். அருள் தேவ் பின்னணி இசை அமைக்கிறார். பாடல்களுக்கு சுரேஷ் பொப்பிலி இசை அமைத்துள்ளார். நரேஷ் பாபு, பவித்ரா லோகேஷ் ஆகிய இருவரும் இதற்கு முன்பு ‘ஹேப்பி வெட்டிங்’, ‘சம்மோகனம்’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

Related Stories: