‘ரேசர்’ படத்தில் பைக் ரேஸ் வீரர்கள்

சென்னை: ஹஸ்ட்லர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் கார்த்திக் ஜெயாஸ், ரெடால் மீடியா ஒர்க்ஸ் சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணைந்து தயாரித்துள்ள படம், ‘ரேசர்’. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி சதீஷ் (எ) சதீஷ் ரெக்ஸ் இயக்குகிறார். பிரபாகர் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் இசை அமைத்துள்ளார். அகில் சந்தோஷ், லாவண்யா, ஆறுபாலா, ‘திரௌபதி’ சுப்பிரமணியன் நடித்துள்ளனர்.  நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த அகில் சந்தோஷ், பைக் ரேசர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். அவர் கேட்கும் விலையுயர்ந்த ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கிக் ெகாடுக்க முடியவில்லை. பிறகு அகில் சந்தோஷ் தானே கஷ்டப்பட்டு சம்பாதித்து, பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயற்சிக்கிறார். அது நடந்ததா என்பது கதை. பாண்டிச்சேரியில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் போட்டி போட்டு பைக் ஓட்டினார். இப்படத்தை அடுத்த மாதம் ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ சார்பில் ஜெனீஷ் வெளியிடுகிறார்.

Related Stories: