ஜான் விக்: அத்தியாயம் 4 - திரைவிமர்சனம்

சாட் ஸ்டாஹெல்ஸ்கி இயக்கிய மற்றும் ஷே ஹாட்டன் மற்றும் மைக்கேல் ஃபின்ச் எழுதிய அமெரிக்க நியோ-நோயர் அதிரடி திரில்லர் படமாகும் . ஜான் விக் பாகங்களின் நான்காம் தவணையாக வெளியாகியுள்ளது.  இதில் டோனி யென் , பில் ஸ்கார்ஸ்கார்ட் , லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் ,, ஷாமியர் ஆண்டர்ஸ்டன் , ஷாமியர் ஆண்டர்ஸ்டன் ஆகியோருடன் கீனு ரீவ்ஸ் தலைப்புக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஜான்விக் பாகங்களின் முக்கிய அம்சமே ஜான்வி கேரக்டரை ஏதேனும் ஒரு கும்பல் தேடிக் கொண்டே இருக்கும் அவரை கொலை செய்ய தலைக்கு இவ்வளவு என் நிர்ணயம் செய்வது தான் படத்தின் கதைக்களம். இந்தப் படத்திலும் ஜான் விக்கை கொலை செய்பவர்களுக்கு ஆரம்ப கட்டமாக 25 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் நிர்ணயம் செய்யப்படுகிறது. நேரம் செல்லச் செல்ல நிர்ணயிக்கப்பட்ட தொகை 40 ஆயிரம் அமெரிக்க டாலராக மாறுகிறது. கூட்டம் கூட்டமாக ஜான்விக்கை தேடி கொலை செய்ய துடிக்கின்றனர் ஜான்விக் அகப்பட்டாரா அவருக்கு என்ன ஆனது என்பது மீதி கதை.

வழக்கம் போலவே எந்த சக்தியும் இல்லாமல் எந்த மாய மந்திரங்களும் இல்லாத சூப்பர் ஹீரோ போலவே படம் முழுக்க சுற்றி தெரிகிறார் ஜான்விக்காக நடித்திருக்கும் கீனு ரீவ்ஸ். மனிதர் எங்கே இருந்து கீழே விழுந்தாலும் ஹீரோவாக இருக்கும் அவருக்குத்தான் ஒன்றும் ஆகவில்லை என்றால் அவரை துரத்திக் கொண்டு வரும் அடியால் கூட்டங்களுக்கும் கூட எதுவும் ஆவதில்லை. இந்தப் படத்தில் முழு நோக்கமே நீளமான பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகள் தான்.

படத்தின் மிகப்பெரும் பலமாக ஆக்சன் கோரியோகிராபி ஒவ்வொரு காட்சியிலும் நம்மை சீட்டு நுனிக்கு இழுத்து வந்து உட்கார வைக்கிறது. குறிப்பாக டாப் ஏங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட ஃபயர் கன் ஸ்டண்ட், கண் தெரியாத கதாபாத்திரத்தில் வரும் டோனி யென் ஜி - டான் ஆக்சன் காட்சிகள் என மிரள வைக்கிறது.

டான் லாஸ்ட்சென் ஒளிப்பதிவும் டைலர் பேட்ஸ்,ஜோயல் ஜே. ரிச்சர்ட் இசையும் ஆக்ஷன் அதிரடி விசுவலுக்கு மேலும் சிறப்பு சேர்த்திருக்கிறது.

படம் முடிந்து விட்டது என நினைக்கும் தருவாயில் எண்டு கிரெடிட் போட்டு இன்னும் சிக்குள் இருக்கிறது என ஜான்விக் ரசிகர்களுக்கு ஆறுதல் கொடுத்திருந்தாலும் படத்தில் சூப்பர் ஹீரோக்கள் போலவும் மந்திரவாதிகள் போலவும் எவ்வளவு சுட்டாலும் எவ்வளவு அடித்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து வரும் கேரக்டர்களால் தெலுங்கு படங்களே தேவலாம் என்றே தோன்றுகிறது. ஆனாலும் பெரும்பாலும் இரண்டாம் மூன்றாம் பாகங்கள் ஏமாற்றும் வரிசையில் ஜான்விக் இப்போதும் தனக்கென ரசிகர்களை உருவாக்கி நான்காம் பாகத்திலும் அதற்கான சிறப்பு அம்சங்களுடன் மிளிர்கிறது.

மொத்தத்தில் ஜான்விக் 4  கீனு ரீவ்ஸ் ரசிகர்களுக்கும் ஹாலிவுட் ஆக்சன் விரும்பிகளுக்கும் ஒரு சில இடங்களில் தென்படும் சினிமா கிளிஷேக்களை பொறுத்துக் கொண்டால் நல்ல ஆக்ஷன் விருந்து நிச்சயம் கிடைக்கும்.

Related Stories: