சென்னை: மலையாள படங்களில் நடித்து வந்த ரஜிஷா விஜயன், தமிழில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ என்ற படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். பிறகு சூர்யாவுடன் இணைந்து ‘ஜெய் பீம்’ என்ற படத்திலும், கார்த்தியுடன் இணைந்து ‘சர்தார்’ என்ற படத்திலும் நடித்திருந்தார். இதை தொடர்ந்து மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘பைசன்’ என்ற படத்தில் துருவ் விக்ரம் அக்காவாக நடித்தார்.
எல்லா படங்களிலும் குடும்பப்பாங்கான கேரக்டரில் நடித்த அவர், மலையாள இயக்குனர் கிரிஷாந்த் இயக்கிய ‘மஸ்திஸ்கா மரணம்’ என்ற படத்தில் இடம்பெற்றுள்ள ‘கோமள தாமர’ என்ற பாடல் காட்சியில், திடீரென்று கிளாமராக நடனம் ஆடியுள்ளார். அவர் கொடுத்து இருக்கும் போஸ்களை பார்த்து அதிர்ச்சியும், அதிக பரவசமும் அடைந்துள்ள ரசிகர்கள், உடனே அந்த போட்டோக்களை வைரலாக்கி வருகின்றனர். தற்போது கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ என்ற படத்தில் ரஜிஷா விஜயன் நடித்து முடித்துள்ளார்.
