திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் திடீர் மாற்றம்: ஏப்ரல் 30ம் தேதி நடப்பதாக அறிவிப்பு

சென்னை: தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2023 முதல் 2026 வரையிலான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல், கடந்த 26ம் தேதி சென்னையில் நடக்கும் என்று இதற்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திட்டமிட்டபடி அந்த தேதியில் தேர்தல் நடக்கவில்லை. முன்னதாக, தயாரிப்பாளர்கள்  சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுவில், ஓய்வுபெற்ற நீதிபதி  வெங்கட்ராமன் தேர்தல் அதிகாரியாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் சில  உறுப்பினர்கள் வழக்கு தொடர்ந்தனர். அந்த அடிப்படையில் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலை நடத்த பாரதிதாசன் என்ற ஓய்வுபெற்ற  நீதிபதியை 2வது தேர்தல் அதிகாரியாக உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.

இத்தேர்தலில் தற்போதைய தலைவர் தேனாண்டாள் முரளி தலைமையில் ஒரு அணியினரும், கவுரவ செயலாளராக இருக்கும் மன்னன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர். தயாரிப்பாளர் சங்கத்துக்கான புதிய தேர்தல் தேதி, வரும் ஏப்ரல் 30ம் தேதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று ஞாயிறு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடக்கிறது. மே 1ம் தேதி வெற்றிபெற்ற புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் நடக்கும் இடம் முடிவாகவில்லை.

Related Stories: