விடுதலை படத்துக்கு 11 இடங்களில் ‘மியூட்’

சென்னை: வெற்றிமாறனின் விடுதலை படத்தில் 11 இடங்களில் வசனங்களை மியூட் செய்திருக்கிறது சென்சார் போர்டு. விஜய் சேதுபதி, சூரி, பவானி, பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் நடித்துள்ள படம் விடுதலை. வெற்றிமாறன் இயக்கியுள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார். 2 பாகமாக இந்த படம் உருவாகியுள்ளது. இதன் முதல் பாகம் நாளை திரைக்கு வருகிறது. இந்நிலையில் சென்சாருக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. படத்தில் போலீசார் தாக்குவது போன்ற காட்சிகள் கொடூரமான முறையில் காட்டப்பட்டுள்ளதாம். இந்த காட்சிகளை நீக்கினால் யு சான்றிதழ் கிடைக்கும் என சென்சார் கூறியுள்ளது. ஆனால் இதை ஏற்க வெற்றிமாறன் மறுத்துவிட்டார். படத்தின் ஜீவநாடியே இந்த காட்சிகள்தான். இதை நீக்க முடியாது என அவர் கூறியிருக்கிறார். மேலும் படத்தில் பல இடங்களில் கெட்ட வார்த்தைகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. இதனால் 11 இடங்களில் வசனங்களை மியூட் செய்திருக்கிறார்கள். அதன் பின் படத்துக்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்

ளது.

Related Stories: