இந்தி படத்துக்கு இளையராஜா இசை

மும்பை: நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்தி படத்துக்கு இசையமைக்கிறார் இளையராஜா. இந்தியில் பல படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். கடைசியாக அமிதாப் பச்சன் நடித்த பா படத்துக்கு அவர் இசையமைத்திருந்தார். இப்போது தமிழில் விடுதலை, வெங்கட் பிரபு இயக்கும் கஸ்டடி, ஆதிராஜன் இயக்கும் நினைவெல்லாம் நீயடா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இந்தியில் உருவாகும் மியூசிக் ஸ்கூல் என்ற படத்துக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை பப்பா ராவ் பில்லாயி இயக்கியுள்ளார். ஸ்ரேயா, பிரகாஷ்ராஜ் நடித்துள்ளனர். இவர்களுடன் ஏராளமான சிறுவர், சிறுமிகள் பள்ளி மாணவர்களாக நடித்திருக்கிறார்கள். ஒரு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அவர்கள் இசை பள்ளி ஒன்றில் சேர்ந்த பிறகு அவர்களின் மனநிலை எப்படி மாறுகிறது என்பதுதான் கதை. இதில் ஆசிரியை வேடத்தில் ஸ்ரேயா நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வரும் மே 12ம் தேதி ரிலீசாகிறது.

Related Stories: