ஜான்வி கபூரின் தெலுங்கு பட துவக்க விழா

ஐதராபாத்: கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று தொடங்கின. ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் ‘ஆச்சார்யா’ படத்தை இயக்கிய இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் இணைகிறார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடிக்கிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார். பிரகாஷ்ராஜ் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று ஐதராபாத்தில் தொடங்கின. இந்நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் ராஜமவுலி க்ளாப்போர்ட் அடித்து படத்தின் பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ‘கேஜிஎஃப்’ பட இயக்குநர் பிரசாந்த் நீலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Related Stories: