ஐஸ்வர்யாவின் கிங் ஆஃப் கோதா

மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிக்கும் ‘கிங் ஆஃப் கோதா’ படம், ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிலாஷ் ஜோஷி இயக்கியுள்ள இப்படத்தின் ஷூட்டிங், தமிழ்நாட்டில் காரைக்குடியில் நடந்து வருகிறது. கேங்ஸ்டர் படமான இதில் ஐஸ்வர்யா லட்சுமி, செம்பன் வினோத் ஜோஸ், ‘சார்பட்டா பரம்பரை’ ஷபீர், பிரசன்னா நடிக்கின்றனர்.

ஜேக்ஸ் பிஜாய், ஷான் ரஹ்மான் இணைந்து இசை அமைக்கின்றனர். பான் இந்தியா படமாக உருவாகும் இப்படத்தின் போஸ்டர், துல்கர் சல்மானின் 11 ஆண்டு கால திரையுலகப் பயணத்தைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஓணம் பண்டிகை வரும் ஆகஸ்ட் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது.

Related Stories: