ரெஜினா என் குடும்ப தோழி: சந்தீப் கிஷன்

சென்னை: சென்னையைச் சேர்ந்த சந்தீப் கிஷன், ரெஜினா இருவரும் தெலுங்கில் முன்னணி நடிகர், நடிகையாக இருக்கின்றனர். இருவரும் கடந்த சில வருடங்களாக நெருக்கமாகப் பழகி வருகின்றனர். விழாக்களில் ஜோடி சேர்ந்து பங்கேற்கின்றனர். கடந்த மாதம் ரெஜினாவின் பிறந்தநாளுக்கு சந்தீப் கிஷன் ‘ஐ லவ் யூ’ சொல்லி வாழ்த்தினார். தற்போது சந்தீப் கிஷன் நடித்துள்ள ‘மைக்கேல்’ என்ற பான் இந்தியா படம், வரும் 3ம் தேதி திரைக்கு வருகிறது.

இதில் ரெஜினா நடிக்கவில்லை என்றாலும், இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சந்தீப் கிஷனுடன் பங்கேற்றார். அப்போது பேசுகையில், ‘சந்தீப் எனக்கு சிறந்த அட்வைசர். அவரை நான் செல்லமாக, ‘தாத்தா’ என்று அழைப்பேன். அந்தளவு எனக்கு தனிப்பட்ட முறையில் நிறைய அறிவுரைகள் சொல்வார். எனது மிகச்சிறந்த நண்பன் சந்தீப்’ என்றார்.

சந்தீப் கிஷன் கூறுகையில், ‘ரெஜினாவை நான் காதலிப்பதாக சில வருடங்களாக சொல்லி வருகின்றனர். அது உண்மை இல்லை. அவர் என் நலம்விரும்பி, என் குடும்ப தோழி. அதை தாண்டி எங்களுக்குள் எதுவும் இல்லை. பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னதை வைத்து, தமிழ் ரசிகர்கள் அதிகமாக ஆச்சரியப்பட்டனர். ‘மைக்கேல்’ எனது திரையுலகப் பயணத்தில் முக்கிய படம் மட்டுமின்றி, இதுவரை நான் நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படமாகும். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் அறிமுகமானேன்.

தெலுங்கில் அதிக படங்களில் நடித்தேன். பிறகு படமே இல்லாமல் வீட்டில் இருந்தேன். தமிழில் ‘மாநகரம்’, ‘மாயவன்’ போன்ற படங்களின் மூலம் மீண்டும் எழுந்து நிற்கிறேன். ‘மைக்கேல்’ காதல், ஆக்‌ஷன், எமோஷன் கலந்த படம். இதில் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். அவர் ஒரு காட்சியில் 5 நிமிடங்கள் வருவதாக திட்டமிடப்பட்டது. ஆனால், அவரது கேரக்டர் மிகவும் பிடித்துவிட்டதால் ஆர்வத்துடன் நடித்தார். இதனால் அவரது காட்சிகள் 20 நிமிடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. படத்தில் அவரது காட்சிகள் பேசப்படுவதாக இருக்கும்’ என்றார்.

Related Stories: