130 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயம் வழங்கிய கீர்த்தி சுரேஷ்

ஐதராபாத்: ‘தசரா’ படக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு 130 தங்க நாணயங்கள் வழங்கி கீர்த்தி சுரேஷ் அசத்தியிருக்கிறார். காந்த் ஒடேலா இயக்கத்தில் நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தசரா’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா முறையில் வரும் 30ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமுத்திரகனி, ஷைன்டாம் சாக்கோ, தீக்ஷித் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை லக்‌ஷ்மி வெங்கடேஸ்வரா நிறுவனம் தயாரித்துள்ளது. அண்மையில் வெளியான படத்தின் டிரெய்லர் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதி நாளன்று ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் படக்குழுவைச் சேர்ந்த 130 பேருக்கு தலா 10 கிராம் தங்க நாணயங்களை வழங்கியுள்ளார். ரூ.70 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை செலவு செய்து தங்க நாணயங்களை கீர்த்தி வழங்கியிருப்பது படக்குழுவினரை உற்சாகப்படுத்தியுள்ளது. இதற்கு முன் மகேஷ்பாபு படத்தில் நடித்தபோதும், படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு தங்க நாணயங்களை கீர்த்தி பரிசாக வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: