டைரக்டருக்கு சசிகுமார் பரிசு

‘அயோத்தி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்திக்கு நடிகர் சசிகுமார் தங்க செயினை பரிசளித்தார்.அறிமுக இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் ‘அயோத்தி’. டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் இந்தி நடிகர் யஷ்பால் சர்மா, பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட், பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்திற்கு என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்திருந்தார். கடந்த மார்ச் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 3 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மனிதத்தையும் மத நல்லிணக்கத்தையும் பேசிய இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.

Related Stories: