சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா, நட்டி நட்ராஜ், சுவாசிகா நடித்துள்ள படம், ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். கடந்த ஆண்டே இதன் படப்பிடிப்பு முடிந்துவிட்டாலும், ரிலீஸ் தேதி குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தற்போது ‘ஜன நாயகன்’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், வரும் பொங்கல் பண்டிகைக்கு ‘கருப்பு’ படத்தை திரைக்கு கொண்டு வரலாமா என்று படக்குழு ஆலோசித்தது. ஆனால், பொங்கல் விடுமுறைக்கு சில நாட்களே இருப்பதால், அந்த முடிவை கைவிட்டுவிட்டு, வரும் பிப்ரவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
‘கருப்பு’ பட டிஜிட்டல் உரிமம் இதுவரை விற்பனை ஆகாததால், அதன் ரிலீஸ் தேதி முடிவாகாமல் இருந்தது. தற்போது வரும் பிப்ரவரி 19ம் தேதி படத்தை வெளியிட திட்ட மிட்டுள்ளனர். அதற்கான பணிகளை தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தொடங்கியுள்ளது.
