வரும் 22ம் தேதி மலையாள படவுலகில் வேலை நிறுத்தம்

சென்னை: மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தியேட்டர் அதிபர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் போன்றவை, தங்களது நீண்ட கால பிரச்னைகளை வலியுறுத்தி, கேரள அரசிடம் கோரிக்கை அளித்திருந்தன. முதல்வர் பினராயி விஜயனும் அவர்களை அழைத்து ஆலோசனை நடத்தி, அந்த பிரச்னைகளை தீர்த்து வைப்பதாக சொன்னார். எனினும், தாங்கள் எதிர்பார்த்த விஷயத்தில் முன்னேற்றம் இல்லாததால், வரும் 22ம் தேதி ஒட்டுமொத்த மலையாள படவுலகமும் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.

தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்துக்கான ஜிஎஸ்டியுடன் சேர்த்து வசூலிக்கப்படும் அதிகமான கேளிக்கை வரியை நீக்க வேண்டும், மின்சார கட்டணத்தை குறைத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தத்தை நடத்துகின்றனர். இந்நிலையில், வரும் 14ம் தேதி மீண்டும் கேரள அரசு அந்தந்த சங்கத்தை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் உடன்பாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories: