ஓடிடியில் வெளியாகும் அகிலன், பகாசூரன்

சென்னை: ‘பூலோகம்’ படத்தை தொடர்ந்து என்.கல்யாணகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த ‘அகிலன்’ படம்,  10ம் தேதி திரைக்கு வந்தது. இப்படம் வரும் 31ம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதில் பிரியா பவானி சங்கர், தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் உத்தமன், மதுசூதன ராவ் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ படம், வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வருகிறது. கீர்த்தி சுரேஷுடன் இணைந்து ‘சைரன்’ படத்திலும், நயன்தாராவுடன் இணைந்து ‘இறைவன்’ படத்திலும் ஜெயம் ரவி நடித்து வருகிறார். கடந்த பிப்ரவரி 17ம் தேதி திரைக்கு வந்த படம், ‘பகாசூரன்’. ேமாகன்.ஜி இயக்கத்தில் கதையின் நாயகனாக இயக்குனர் செல்வராகவன் நடித்திருந்தார். இப்படம் வரும் 28ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Related Stories: