‘பதான்’ பட போஸ்டர் கிழிப்பு எதிரொலி முதல்வரிடம் அதிகாலை 2 மணிக்கு பேசிய ஷாருக்கான்

பதான் படம் திரையிடுவது தொடர்பாக, பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தன்னிடம் அதிகாலை 2 மணிக்கு போனில் பேசியதாக அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார். இது சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியில் ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்துள்ள ‘பதான்’ படம், வரும் 25ம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு ெமாழிகளில் திரைக்கு வருகிறது. இதில் சர்ச்சைக்குரிய சில காட்சி கள் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிட்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. அசாமில் நரேங்கி பகுதியில் தியேட்டரை முற்றுகையிட்ட பஜ்ரங் தள அமைப்பினர், அங்கு ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை தாறுமாறாக கிழித்து எரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஷாருக்கான் யார்... அவரைப் பற்றியோ, அவரது படமான ‘பதான்’ பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. நடிகர் தரப்பில் இருந்து யாரும் பேசவில்லை. சட்டம் ஒழுங்கு மீறப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இந்நிலையில், நேற்று தனது டிவிட்டரில் ஹிமந்தா பிஸ்வா சர்மா வெளியிட்டிருந்த பதிவு வருமாறு: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இன்று (நேற்று) அதிகாலை 2 மணிக்கு என்னை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். தனது திரைப்படம் தொடர்பாக நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார். அவரிடம், ‘சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும்’ என்று உறுதி அளித்தேன். இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories: