உதய் மகேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்

கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ், ஹாட் ஸ்டார் இணைந்து தயாரிக்கும் படத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள அனஸ்வரா ராஜன், பின்னணிப் பாடகியாகவும் இருக்கிறார். ‘நாளை’, ‘சக்கர வியூகம்’ ஆகிய படங்களை இயக்கிய உதயபானு மகேஷ்வரன், தற்போது தனது பெயரை உதய் மகேஷ் என்று மாற்றிக்கொண்டு இப்படத்தை இயக்குகிறார். புஷ்பா கந்தசாமி, கந்தசாமி பரதன் தயாரிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமாருக்கும், அவரது 6 வயது நிரம்பிய அக்கா மகளுக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை மையப்படுத்தி படம் உருவாகிறது.

முக்கிய வேடங்களில் சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி, ஆடுகளம் நரேன், மதுசூதனன், குமரவேல், முத்துக்குமார், டேனியல், நமோ நாராயணன், மயில்சாமி, முத்துக்காளை, சவுந்தர், பேபி மேக்னா சுரேஷ் நடிக்கின்றனர். யு.கே.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஹேஷம் அப்துல் வஹாப் இசை அமைக்கிறார். பார்வதி மீரா பாடல்கள் எழுதுகிறார். உதய் மகேஷ், சபாபதி ஷண்முகம், ஜி.நரேன் குமார் இணைந்து திரைக்கதை எழுதுகின்றனர். உதய் மகேஷ், சபாபதி ஷண்முகம் இணைந்து வசனம் எழுதுகின்றனர்.

Related Stories: