சென்னை: ஆட்லர் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் எஸ். ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சொட்ட சொட்ட நனையுது’. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ வெளியிடப்பட்டுள்ளது. இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்ஷன், நிதின் சத்யா, மா.க.ப ஆனந்த், புகழ், தீனா, பாலா, முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் சி.வி குமார், லிப்ரா ரவிச்சந்திரன், நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இன்றைய தலைமுறையின் முக்கிய சிக்கலை, ஒரு கலக்கலான கமர்ஷியல் படமாக சிரிக்க சிரிக்க வைக்கும் ஒரு படமாக இப்படம் உருவாகியுள்ளது.