விஜய் சேதுபதி வெளியிட்ட விமலின் கரம் மசாலா

சென்னை: நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், இயக்குனர் மஜீத் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி திருவிழாவாக உருவாகியுள்ள கரம் மசாலா படப்பிடிப்பு முழுமையாக முடிந்தது. படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக்கை விஜய் சேதுபதி வெளியிட்டார். விமலுக்கு சாம்பிகா டயானா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன்எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு, கே. கோகுல். எடிட்டிங், ஏ.ஆர்.சிவராஜ். இசை, பைஜூ ஜேக்கப், இ.ஜே. ஜான்சன். நிர்வாக தயாரிப்பு. மு. தென்னரசு. புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, முழுக்க முழுக்க சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் விஜய் நடித்த தமிழன் படப்புகழ் இயக்குனர் அப்துல் மஜீத்.

Related Stories: