சென்னை: ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த படத்தில் தனது பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாகவும் இளையராஜா குற்றம்சாட்டியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் திரைக்கு வந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இதில் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து படத் தயாரிப்பு நிறுவனத்திடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இந்த படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியமைக்காக ராயல்டி தர வேண்டும். இல்லாவிட்டால் படத்தில் தனது பாடல்களை நீக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த ‘ஒத்த ரூபாய் தாரேன்’, ‘இளமை இதோ இதோ’, ‘என் ஜோடி மஞ்சக்குருவி’ ஆகிய 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.