இது மிகப்பெரிய கோழைத்தனம்: நெட்டிசன்கள் மீது திரிஷா கடும் தாக்கு

சென்னை: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா ஜோடியாக நடித்திருக்கும் ‘குட் பேட் அக்லி’ என்ற படம் நேற்று முன்தினம் திரைக்கு வந்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனால், வசூலில் முன்னணி இடத்தில் இருக்கிறது. படத்தில் ரம்யா என்ற கேரக்டரில் திரிஷா நடித்துள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் திரிஷா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகியுள்ளது. சமூக வலைத்தளங்களில் முக அடையாளமின்றி டாக்ஸிக் பதிவுகளை வெளியிட்டு வருபவர்களுக்காக இப்பதிவை திரிஷா வெளியிட்டுள்ளார்.

அதில் அவர், ‘டாக்ஸிக் நபர்களே, நீங்கள் எப்படி உங்கள் வாழ்க்கையை வாழ்கிறீர்கள் மற்றும் நன்றாக தூங்குகிறீர்கள்? சமூக வலைத்தளங்களில் அமர்ந்து மற்றவர்களை பற்றி அர்த்தமற்றவற்றை பதிவிடுவது, அன்றைய நாளில் உண்மையாகவே உங்களை மகிழ்ச்சி அடைய வைக்கிறதா? உங்களுக்காகவும், உங்களுடன் வசிக்கும் அல்லது உங்களை சுற்றியுள்ளவர்களுக்காகவும் உண்மையிலேயே நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இது உண்மையிலேயே பெயரில்லாத கோழைத்தனம். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக’ என்று கடுமையாக தாக்கியுள்ளார்.

Related Stories: