சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் முரளி ராமசாமி மற்றும் நிர்வாகிகள் நேற்று வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உள்ள எல்லா சங்கங்களிலும் அதிருப்தி அடைந்திருக்கும் பல உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளர் சங்கம் உறுதுணையாக நிற்கும். ஆர்கே செல்வமணி அவர்கள் நன்கு புரிந்து இருந்தும் அது தவறாக புரிந்து கொண்ட மாதிரி வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பாக, புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டமைப்பு பற்றி தரம் தாழ்ந்து சொல்லி இருப்பது அனைத்து தொழிலாளர்களையும் அவமதிக்கும் செயலாகும். அவரது பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர்களை பிரித்தாலும் சூழ்ச்சியை கையில் எடுத்துள்ளார்.
நம் தமிழ்நாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு மிகவும் குறைந்த அளவே கிடைக்கிறது இதனை புரிந்து கொள்ளாமல் தொழிலாளர்கள் திரு செல்வமணி அவர்களின் பேச்சைக் கேட்டு தமிழ்நாட்டில் நடைபெறும் திரைப்பட படப்பிடிப்பு மற்றும் போஸ் ப்ரடெக்ஷன் பணிகளை நிறுத்தி வருகிறார்கள். படப்பிடிப்பிலும் பிரச்னை செய்கிறார்கள். மேற்படி பிரச்சனை குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அவர்களையும் சந்தித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் விளக்கமாக கூறியதின் அடிப்படையில் காவல்துறை சார்பாக உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அவர்கள் உத்திரவாதம் அளித்துள்ளார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.