மெய் சர்வதேச திரைப்பட விழா விருதுகள்

சென்னை: மெய் சர்வதேச திரைப்பட விழா நடத்திய விருது வழங்கும் விழா சென்னையில் சினிமா ஆர்வலர்கள் மற்றும் குறும்பட இயக்குனர்கள் மத்தியில் நடைபெற்றது. இந்தியா மற்றும் உலக அளவில் இத்தாலி, ஜெர்மனி மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து இவ்விழாவில் கலந்து கொண்ட படங்களில் தேர்வு செய்து வெற்றி பெற்ற படங்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த விருது விழாவில் பங்கேற்று சிறந்த முழு நீளத் திரைப்படம் என்ற விருதினை வென்ற SO.U.VENIR திரைப்படத்தின் இயக்குனர் தினேக்ஷ் குமாருக்கு விருது தரப்பட்டது. மெய் திரைப்பட விழாவின் இயக்குநர் செல்வராம் மற்றும் சிஇஓ பி. அன்பழகன் மற்றும் பட விழா தயாரிப்பாளர் எஸ்.ஜெயசீலன் இவ்விழா சிறப்பாக நடந்து முடிந்ததற்கும் ,இவ்விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தனர்.

 

Related Stories: