பலன் தரும் ஸ்லோகம் (மனக்கவலையை போக்கும் மகேஷ்வரன் துதி )

துஸ்வப்ந துஸ்ஸகுன துர்கதி தௌர்மனஸ்ய

துர்பிக்ஷ துர்வ்யஸந துஸ்ஸஹ துர்யஸாம்ஸி

உத்பாததாப விஷபீதிமஸத்க்ரஹார்தி

வ்யாதீம்ஸ்ச நாஸயது மே ஜகதாமதீஸ:

- ரிஷப யோகி அருளிய சிவகவசம்

பொதுப்பொருள்: உலகத்தையே ரட்சிப்பவனே,

பரமேஸ்வரா, நான் காணும் கெட்ட கனவுகள் பலிக்காமல் போக அருள்வாயாக. நான் சந்திக்கும் கெட்ட சகுனங்கள் எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதிருக்கச் செய்வாயாக. மிகுந்த உடல் கஷ்டம், மனக்கவலை, பஞ்சம், துக்கம், அவமானத்தில் ஆழ்த்தும் கெட்ட கீர்த்தி போன்றவை என்னை நெருங்காதபடி அருள் செய்யுங்கள். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்களால் ஏற்படும் ஆபத்துகளையும், கிரக மாற்றங்களால் ஏற்படும் கவலை, நோய், இழப்புகள் எல்லாவற்றையும் விலக்கி அருள் செய்வீர்களாக. என் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக ஒளிர அருள் செய்யுங்கள். தினமும் குளித்தவுடன் இந்த துதியை உளமாறப் படித்து வந்தால் துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் காணாமல் போய்விடும். ஆயுள் நீடிக்கும்.

Related Stories:

>