சிறு பட்ஜெட் படங்கள் எல்லாம் தியேட்டரில் வசூல் அள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில், இதுவரை சமீபமாக வந்த படங்களில் அதிக வசூலை ஃபயர் படம் குவித்துள்ளது. நல்ல கதையம்சத்துடன் படம் உருவாகி இருப்பதே இதற்கு காரணம். ஆரம்பத்தில் 20 திரைகளில் தான் சென்னையில் ‘ஃபயர்’ படம் வெளியானது. ஆனால், தற்போது 60 திரைகளாக அதிகரிக்கப்பட்டு, ‘ஃபயர்’ படம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. படத்தில் நடித்த அனைவருக்கும் ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார் பாலாஜி முருகதாஸ். நாகர்கோயில் காசி இளம் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய கதையை மையமாக கொண்டு உருவான இந்த படத்தில் காசி கதாபாத்திரத்திலேயே பாலா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
