மும்பை: தயாரிப்பாளர் போனி கபூர், மறைந்த நடிகை ஸ்ரீதேவி தம்பதியின் மூத்த மகளும், பாலிவுட் இளம் முன்னணி நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர் சமீபத்தில் அணிந்திருந்த புடவையைப் பற்றி நெட்டிசன்களும், ரசிகர்களும் ஆச்சரியத்துடன் கமென்ட் வெளியிட்டு வருகின்றனர். ‘பரம் சுந்தரி’ என்ற இந்திப் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ரா ஹீரோவாக நடிக்க, கேரள பெண்ணாக ஜான்வி கபூர் நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் கேரளா மற்றும் அதைச்சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. இதற்காக கடந்த சில நாட்களாக கேரளாவில் தங்கியிருந்த ஜான்வி கபூர், தன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கான படப்பிடிப்பு இல்லாத நேரத்தில், கேரளாவிலுள்ள இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளைச் சுற்றிப் பார்க்க கிளம்பினார்.
அப்போது அவர் சிம்பிளான வெள்ளை நிறப் புடவை ஒன்றை அணிந்திருந்தார். பார்க்க சாதாரணமாக காட்சி அளிக்கும் இந்தப் புடவையின் விலை 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. இதையறிந்து ஆச்சரியப்பட்ட ரசிகர்களும், நெட்டிசன்களும் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கமென்டுகளை வெளியிட்டு வருகின்றனர். அதேவேளையில், ‘பல்வேறு திரையுலகைச் சேர்ந்த சில முன்னணி நடிகைகள், இதுபோல் விலையுயர்ந்த ஆடைகள் அணிவது புதுமையான விஷயம் இல்லை என்றாலும், ஜான்வி கபூர் அணிந்திருந்த இந்தப் புடவை விலை இவ்வளவு பெரிய தொகையா என்று நம்பவே முடியவில்லை’ என்று பலர் கமென்ட் போஸ்ட் செய்து வருகின்றனர்.