திருமணம் முடிந்த நிலையில் பார்ட்டி: கணவர் இல்லாமல் தனியாக வந்த கீர்த்தி சுரேஷ்

மும்பை: திருமணம் முடிந்த கையோடு பட விழாவுக்கு வந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். படக்குழு கொடுத்த பார்ட்டியில் அவரது கணவர் பங்கேற்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது. கீர்த்தி சுரேஷ், ஆண்டனி தட்டில் திருமணம் கடந்த 12ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று மாலை மும்பையில் ‘பேபி ஜான்’ இந்தி படத்தின் புரமோஷன் நிகழ்வில் கீர்த்தி சுரேஷ் கலந்துகொண்டார். அப்போது கவர்ச்சி உடை அணிந்து வந்த அவர், தாலி அணிந்திருந்தார். இந்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின. இந்நிலையில் படக்குழு சார்பில் நேற்றிரவு பார்ட்டி தரப்பட்டது.

இதில் பங்கேற்க கீர்த்தியின் கணவர் ஆண்டனிக்கும் அழைப்பு தரப்பட்டதாம். ஆனால் அவர் பார்ட்டிக்கு வரவில்லை. கீர்த்தி சுரேஷ் மட்டும் தனியாக வந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரித்தபோது, ‘எல்லாவற்றையும் வேறொரு கண்ணோட்டத்தில் சிலர் பார்க்கிறார்கள். அப்படி எதுவும் இல்ைல. ஆண்டனி தட்டில் கூச்ச சுபாவம் உள்ளவர். வெளியிடங்களுக்கு அதிகம் செல்ல மாட்டார். அதனால்தான் பல வருடமாக காதலித்தாலும் கீர்த்தியுடன் வெளியிடங்களில் யாருமே அவரை பார்த்தது கிடையாது. அந்த வகையில்தான் பார்ட்டிக்கும் அவர் வரவில்லை’ என ஆண்டனிக்கு நெருங்கிய தரப்பு தெரிவித்தது.

Related Stories: