இது தொடர்பாக தமன்னாவிடமும் நோரோவிடமும் பேசி அவர்களின் சம்மதத்தையும் பெற்றனர். இதுதொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. அந்த சமயத்தில் இது பற்றி அறிந்த பாடகர்கள் ஹரிஹரன், சங்கர் மகாதேவன் அதிர்ச்சி அடைந்தனர். எங்களது இசை நிகழ்ச்சியில் கிளாமர் ஆட்டம் இடம்பெறுவதா என அவர்கள் கோபம் அடைந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து தமன்னா, நோரா பதேஹி டான்ஸ் நிகழ்ச்சி எங்கள் நிகழ்ச்சியுடன் நடந்தால் நாங்கள் பாட முடியாது என சொன்னதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமன்னா, நோராவின் டான்ஸ் நிகழ்ச்சியை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கைவிட்டுள்ளனர்.
