விபரீதமான கதையில் சாக்‌ஷி அகர்வால்

‘போனின்றி அமையாது உலகு’ என்கிற டேக் லைனுடன் ‘ரிங் ரிங்’ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் சக்திவேல் இயக்கி உள்ளார். இதற்கு முன்பு கந்தகோட்டை, ஈகோ, 4 சாரி படங்களை இயக்கிய இவருக்கு இது நான்காவது படம்.

இப்படத்தை தியா ஸ்ரீ கிரியேஷன்ஸ் மற்றும் ரூல் பிரேக்கர்ஸ் புரொடக்சன் சார்பில் ஜெகன் நாராயணன் , சக்திவேல் தயாரித்துள்ளனர். திருமணத்திற்கு முன்பு காதலர்கள் போனை மாற்றிக் கொண்ட கதை ‘லவ் டுடே’ என்றால் திருமணத்திற்குப் பிறகு தம்பதிகள் போனை மாற்றிக் கொண்ட கதை ‘ரிங் ரிங் ‘.

இப்படத்தில் விவேக் பிரசன்னா, சாக்‌ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்குப் பாடல்கள், பா. ஹரிஹரன். கலை இயக்கம், தினேஷ். எடிட்டிங், பி. கே. ஒளிப்பதிவு, பிரசாத். இசை, வசந்த் இசைப்பேட்டை. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டு வாழ்த்தினார். ஜனவரி 3ம் தேதி வெளியாகிறது.

Related Stories: