பிரதர் படம் சவாலாக இருந்தது: ஜெயம் ரவி

சென்னை: தீபாவளியன்று திரைக்கு வரும் `பிரதர்’ படத்தை ராஜேஷ்.எம் எழுதி இயக்கியுள்ளார். ஜெயம் ரவி, பிரியங்கா மாகன், பூமிகா, நட்டி, சீதா, அச்யுத் குமார், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். படம் குறித்து ஜெயம் ரவி கூறியதாவது: கண்டிப்பாக இப்படத்தில் குழப்பமான கதை இருக்காது. குடும்பங்களுக்கு தேவையான எல்லா விஷயங்களும் இருக்கும். தீபாவளி ரிலீசுக்கு என்னென்ன டிக் மார்க் வேண்டுமோ, அது எல்லாமே இதில் இருக்கிறது. சென்சாரில் ஒரு ‘கட்’ கூட கிடையாது. கிளீன் ‘யு’ சர்ட்டிபிகேட் கொடுத்திருக்கிறார்கள்

என்றால், இப்படத்தின் தரத்தைப் பற்றி இதற்கு மேல் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் முழுவதுமாக என்ஜாய் செய்து படத்தில் நடித்தோம். பூமிகா எனக்கு அக்காவாக நடித்துள்ளார். அவரது கேரக்டர்தான் படத்தின் தூண். எல்லா காட்சிகளையும் ராஜேஷ் சிறப்பாக இயக்கி இருந்ததால், அதில் எதை வெட்டுவது? எதை இணைப்பது என்று எடிட்டர் திணறினார். அவருக்கு இப்படம் மிகப்பெரிய சவாலாக இருந்தது. முழுநீள பேமிலி எண்டர்டெயினரின் தன்மைகளைப் புரிந்துகொண்டு எடிட்டிங் செய்திருக்கிறார்.

Related Stories: