சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டுக்கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல படங்கள், சரியான திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கிறது. அந்த நிலையை மாற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படுகிறது. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகளை தொடங்கலாம் என்பதால், வரும் 16.8.2024 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் படங்களைப் பற்றிய விவரங்களை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
அந்தப் படப்பிடிப்புகளை வரும் அக்டோபர் 30ம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதால், தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, வரும் 1.11.2024 முதல் தமிழ் சினிமாவின் அனைத்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படும். திரைத்துறை சம்பந்தமாக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
The post நவம்பர் 1 முதல் தமிழ் சினிமா ஸ்டிரைக்: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.