ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதப்பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி அருள்மிகு பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாதப்பெருமாள் கோயில் பங்குனி பிரமோத்ஸவ விழா தேரோட்டம் நடைபெற்றது. 108 திவ்ய தேசங்களில் 44 திவ்ய தேசமாக அழைக்கப்படும் திருப்புல்லாணி பத்மாஸனித்தாயார் சமேத ஆதிஜெகநாதப்பெருமாள் திருக்கோயில் பங்குனி பிரமோத்ஸவ விழா கடந்த 12ம் தேதி முதல் தொடங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது.

நேற்று 9ம் திருநாள் நிகழ்ச்சியாக ரதோத்ஸவம் என்றழைக்கப்படும் தேரோட்டம் நடைபெற்றது. தேராட்டத்தை முன்னிட்டு தேரின் கும்பம், அலங்கார துணிகள், தட்டிகள் புதிதாய் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் அலங்காரம் செய்யப்பட்டது. காலை 9 மணியளவில் பெருமாள் பத்மாஸனித்தாயாருடன் நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்தார். தேராட்டம் நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

Related Stories: