மும்பை: பாலிவுட் நடிகையும், பாஜ எம்பியுமான கங்கனா ரனவத் தயாரித்து இயக்கி, இந்திரா காந்தியாக நடித்திருக்கும் இந்தி படம், ‘எமர்ஜென்சி’. கடந்த 6ம் தேதி திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால், சீக்கிய அமைப்புகள் கண்டனக்குரல் எழுப்பியதால், திட்டமிட்டபடி படம் ரிலீசாகவில்லை. இதில் 3 சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி, சென்சார் போர்டு சான்றிதழ் வழங்க மறுத்தது. இதனால், அக்காட்சிகளை நீக்குவதாக படக்குழு உறுதி அளித்த பிறகு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்திடம் மீண்டும் முறையிடப்பட்டது. சில நிபந்தனைகளுடன், ‘யுஏ’ சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்சார் போர்டு குறிப்பிட்ட 3 காட்சிகள் வெட்டப்பட்டுள்ளன. அதில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் இந்திய பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் நீக்கப்பட்டன. அதில் அவர், ‘இந்திய பெண்கள் முயல்களை போல் வளர்கிறார்கள்’ என்று கூறிய காட்சி ஒன்று. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கையைப் பற்றிய படம் என்பதால், சில காட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிக்கும் வகையில் இருப்பதாக கூறப்பட்டது. இதனால், அக்காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது ‘எமர்ஜென்சி’ படத்துக்கு சென்சார் போர்டு கிரீன் சிக்னல் கொடுத்து இருப்பதால், விரைவில் படம் வெளியாகிறது.
The post சர்ச்சைக்குரிய 3 காட்சிகள் நீக்கம்: கங்கனாவின் எமர்ஜென்சி படத்துக்கு யுஏ சான்றிதழ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.