போட்டோக்களை நீக்கினார் தமன்னா

ஐதராபாத்: முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான தமன்னா, சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த கடை திறப்பு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார். ‘இப்போது திருமணம் செய்யும் எண்ணமே எனக்கு இல்லை’ என்று அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்களும், சில நெட்டிசன்களும், தமன்னா தனது காதலனும், பாலிவுட் நடிகருமான விஜய் வர்மாவை பிரிந்துவிட்டதாக இணையதளங்களில் கமென்ட் வெளியிட ஆரம்பித்தனர்.

இதுகுறித்து தமன்னாவின் கவனத்துக்கு கொண்டு சென்றபோது, அவர் எந்த பதிலும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இந்தியில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப்தொடரில் கவர்ச்சியாக நடித்த தமன்னா, ‘ஆஜ் கி ராத்’ என்ற பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை மகிழ் வித்தார். இந்நிலையில், புது போட்டோஷூட் ஒன்றை நடத்தியிருந்த அவர், அதில் கண்ணனின் ராதாவாக காட்சியளித்தார்.

அந்த போட்டோக்களில் தமன்னா அணிந்திருந்த உடை ஆபாசமாக இருந்ததாகவும், ராதாவை அவமதித்து விட்டார் என்றும் பலத்த சர்ச்சை ஏற்பட்டது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை உணர்ந்த தமன்னா, தற்போது அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டார். முன்னதாக அந்த போட்டோக்களை பகிர்ந்திருந்த அவர், ‘ராதாவாக நான் உருவகப்பட்டபோது உன்னதமாக உணர்ந்தேன். அனைத்தையும் மீறிய ஒரு தெய்வீக சக்தி இருக்கிறது’ என்று கூறியிருந்தார்.

The post போட்டோக்களை நீக்கினார் தமன்னா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: