இந்த வாரம் என்ன விசேஷம்?

மார்ச் 23, சனி  

Advertising
Advertising

உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். காரைக்கால் அம்மையார் குரு பூஜை. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் பட்டாபிஷேகம். திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப் பெருமாள் புட்லூர் திருவூரல் உற்சவம்.

மார்ச் 24, ஞாயிறு  

சங்கடஹரசதுர்த்தி. உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாள் காலை பல்லக்கு, இரவு பெருமாள் தாயார் சந்திரப் பிரபையில் பவனி. நத்தம் ஸ்ரீ மாரியம்மன் பாற்குடக் காட்சி. வலங்கைமான் பாடைக்காவடி, ஸ்ரீசிவராம கிருஷ்ண அவதூதாள் ஆராதனை, சேலையூர் ஸ்ரீசாந்தானந்த சுவாமிகள் ஜெயந்தி. காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரநாதர் 108 சங்காபிஷேகம், கலசாபிஷேகம்.

மார்ச் 25, திங்கள்  

திருப்பரங்குன்றம் ஆண்டவர் பெரியதேரில் தேரோட்டம். மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலஸ்வாமி உற்சவம் ஆரம்பம். கல்யாண அவசரத் திருக்கோலமாய்த் திருச்சிவிகையில் பவனி. நந்தம் ஸ்ரீ மாரியம்மன் மஞ்சள் பாவாடை, பால்குடம், காவடி ஆட்டம்.

மார்ச் 26, செவ்வாய்.

சஷ்டி. திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரி நாதர் கருட வாகனத்தில் திருவீதியுலா. மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் விடையாற்று உற்சவம். நத்தம் ஸ்ரீமாரியம்மன் பொங்கல் பெருவிழா. பட்டுக்கோட்டை ஸ்ரீநாடியம்மனுக்கு காப்பு கட்டுதல்.

மார்ச் 27, புதன்  

சென்னை மல்லீஸ்வரர் விடையாற்று உற்சவம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புஷ்பப் பல்லக்கில் பவனி. மன்னார்குடி ராஜகோபால சுவாமி ராஜாங்க சேவை. திருவேதிக்குடியில் சூரிய பூஜை.

மார்ச் 28, வியாழன்  

மன்னார்குடி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி கோவர்த்தனகிரி பந்தலடி சென்று திரும்புதல். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருவெள்ளறை ஸ்ரீஸ்வேதாத்திரி நாதர் காலை அன்ன வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் புறப்பாடு. தென்பரம்பைக்குடியில் சூரிய பூஜை.

மார்ச் 29, வெள்ளி  

உப்பிலியப்பன் கோயில் ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு புன்னைமர வாகனத்தில் பவனி வரும் காட்சி. தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் உற்சவம்.

Related Stories: