மும்பை: இந்திய மதிப்பில் 1674 கோடி ரூபாய் முதலீட்டில் உருவான ‘டெட்பூல் அண்ட் வோல்வரின்’ திரைப்படம் முதல் நாளிலேயே அமெரிக்காவில் மட்டும் 35 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. ஹியூ ஜேக்மேன் பல வருடங்கள் கழித்து மீண்டும் எக்ஸ் மேனாக நடித்துள்ளார். லோகன் இறந்து விட்ட நிலையில், அவரது இன்னொரு வேரியன்டை கண்டு பிடித்து தனது உலகத்தை காப்பாற்ற டெட்பூல் முயற்சிப்பது தான் இந்த படத்தின் கதை.
ரியான் ரெனால்ட்ஸின் காமெடி டைமிங் பக்காவாக செட்டாகியுள்ள நிலையில், படத்தில் இடம்பெறும் இரட்டை அர்த்த வசனங்கள் இளம் ரசிகர்களை கவர்ந்து வருகிறதாம். இந்தியாவிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியான இந்த படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது. உலகளவில் இந்த படம் முதல் வாரத்தில் மட்டுமே 340 மில்லியன் டாலர்களை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதாவது 2800 கோடி ரூபாய் வசூலை அள்ளும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. அந்தளவுக்கு படத்திற்கான எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் அதிகரித்து இருக்கிறது. 200 மில்லியன் டாலரில் உருவாகியுள்ள இந்த படம் முதல் 3 நாட்களில் 340 மில்லியன் டாலர் வசூல் செய்தால் அதைவிட பெரிய ஜாக்பாட் என்ன இருக்கப் போகிறது என்கின்றனர் ஹாலிவுட் வர்த்தகர்கள். அப்படியே அடுத்த படத்தில் அயன்மேன் வேரியன்ட்டையும் கொண்டு வந்துவிடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
The post டெட்பூல் ஹாலிவுட் படம் இந்தியாவிலும் வசூல் வேட்டை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.