சீனு ராமசாமி அறிமுகப்படுத்தும் ஹீரோ

சென்னை: ரியோ ராஜ் நடிப்பில் வெளியான ‘ஜோ’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர், ஏகன். அவரை தனது ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்துகிறார், இயக்குனர் சீனு ராமசாமி. அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் ஏகன் ஏற்றுள்ள கேரக்டர், இதுபோன்ற அண்ணன் நமக்கு இல்லையே என்று ரசிகர்களை ஏங்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்கிறார். ஏகன் கூறுகையில், ‘ஒருவரது திறமையை அங்கீகரிப்பதில் தமிழ் ரசிகர்களுக்கு தனி இடம் உண்டு. தொடர்ந்து சவாலான வேடங்களில் நடிக்க விரும்புகிறேன்’ என்றார்.

The post சீனு ராமசாமி அறிமுகப்படுத்தும் ஹீரோ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: