இந்த வாரம் என்ன விசேஷம்?

ஆகஸ்ட் 11, சனி 

Advertising
Advertising

ஆடி அமாவாசை. சதுரகிரி ஸ்ரீ சுந்தர மகாலிங்கம் பெருந் திருவிழா. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் காலை தங்கப் பல்லக்கில் பவனி.

ஆகஸ்ட் 12, ஞாயிறு 

ச்ராவண மாதம் ஆரம்பம். சந்திர தரிசனம். நாகப்பட்டினம் நீலாயதாக்ஷியம்மன் கண்ணாடிப் பல்லக்கில் பவனி வரும் காட்சி. சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் புஷ்பங்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிரதத்தில் புறப்பாடு.

ஆகஸ்ட் 13, திங்கள். 

ஆடிப்பூரம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரதம். திருவஹீந்திரபுரம் தேவநாதர், ஆண்டாள் திருமஞ்சனம். பின் பெருந்தேரில் புறப்பாடு. நாகப்பட்டினம் நீலாய தாக்ஷியம்மன் பீங்கான் தேரோட்டம். சரஸ்வதி அலங்காரம். சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் புஷ்பக விமானத்தில் பவனி.

ஆகஸ்ட் 14, செவ்வாய்

திருக்கழுக்குன்றம் மகாபிஷேகம். திரிபுரசுந்தரியம்மன் திருக்கல்யாணம். தூர்வா கணபதி விரதம், சேலம் செவ்வாய்ப்பேட்டை ஸ்ரீமாரியம்மன் வசந்த உற்சவம். திருவாடானை ஸ்நேகவல்லியம்மன், நயினார் கோயில் செளந்தரநாயகி தலங்களில் தபசுக்காட்சி.

ஆகஸ்ட் 15, புதன் 

சதுர்த்தி. கருட நாக பஞ்சமி. சுரைக்காய் சுவாமிகள் குரு பூஜை. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழாத் தொடக்கம். அரவிந்தர் தினம்.

ஆகஸ்ட் 16, வியாழன் 

குமார சஷ்டி. ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன், நயினார்கோவில் செளந்திரநாயகி இத்தலங்களில் ஊஞ்சலில் காட்சியருளல்.

ஆகஸ்ட் 17, வெள்ளி 

சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை. திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு.

Related Stories: