ஹாலிவுட் நடிகருடன் மாளவிகா சந்திப்பு

லண்டன்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன், ‘தங்கலான்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இந்த நிலையில், சமீபத்தில் லண்டன் சென்றிருந்த மாளவிகா மோகனன் அவரை நேரில் சந்தித்துள்ளார். இருவரும் சந்தித்த போட்ேடாவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். மேலும், பல மாதங்களுக்குப் பிறகு டேனியல் கால்டாகிரோனை லண்டனில் சந்திப்பது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இருவரும் ‘தங்கலான்’ படத்தை மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

தற்போது இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, முத்துக்குமார், ஹரி கிருஷ்ணன், பிரீத்தி, அர்ஜூன் பிரபாகரன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் நடித்திருக்கின்றனர். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். பா.ரஞ்சித் எழுதி இயக்கியுள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் இடைவிடாமல் நடந்து வருகின்றன.

The post ஹாலிவுட் நடிகருடன் மாளவிகா சந்திப்பு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: