இந்த வாரம் என்ன விசேஷம்?

டிசம்பர் 15, சனி  

Advertising
Advertising

அஷ்டமி. கும்பகோணம் ஸ்ரீ ஆராவமுதன் ஊஞ்சல் உற்சவம் பூர்த்தி.

டிசம்பர் 16,  ஞாயிறு  

ஆலயங்களில் தனுர்மாத பூஜை ஆரம்பம். ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை இத்தலங்களில் பகற்பத்து உற்சவ சேவை. சர்வ ஆலயங்களிலும் திருப்பாவை, திருவெம்பாவை உற்சவம் ஆரம்பம்.

டிசம்பர் 17,  திங்கள்   

ஸ்ரீ குற்றாலநாதர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் மோகனாவதாரம்.

டிசம்பர் 18, செவ்வாய்  

வைகுண்ட ஏகாதசி. சகல விஷ்ணு ஆலயங்களிலும் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு விழா. ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் ஊர்த்துவ தாண்டவ காட்சி

டிசம்பர் 19, புதன்  

துவாதசி. திருப்பதி நவநிதி மஹா தீர்த்தம். திருவிண்ணாழி பிரதட்சணம். நாச்சியார் கோவில் ஸ்ரீ எம் பெருமான் தெப்பத்தில் உற்சவம்.

டிசம்பர் 20, வியாழன்  

திரயோதசி. பிரதோஷம். கார்த்திகை விரதம். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள், மதுரை ஸ்ரீகூடலழகர் இத்தலங்களில் திருவாய்மொழி உற்சவம். ஆவுடையார் கோயில் ஸ்ரீ மாணிக்கவாசகர் எல்லாம் வல்ல சித்தராய், இரவு வெள்ளி குதிரையில் சேவகனாய் காட்சி அருளல்.

டிசம்பர் 21, வெள்ளி  

சதுர்த்தசி. சிதம்பரம் ஸ்ரீ சிவபெருமான் தங்க ரதத்தில் பிட்சாண்டவர் திருக்கோலமாயக் காட்சியருளல். நடராஜர் அபிஷேகம் (பின் இரவு) தத்தாத்ரேய ஜெயந்தி. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் ராப்பத்து உற்சவ சேவை.

Related Stories: