தச்சநல்லூரில் ஐயப்ப சப்பர பவனி : திரளானோர் தரிசனம்

நெல்லை: தச்சநல்லூரில் ஜோதி வழிபாட்டுக் குழு ஐயப்ப பக்தர்கள் சார்பில் ஐயப்ப சப்பர பவனி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.

தச்சநல்லூர் ஜோதி வழிபாட்டுக் குழு ஐயப்ப பக்தர்கள் சார்பில்  ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஐயப்ப பவனி விழா நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி  இந்தாண்டுக்கான ஐயப்ப பவனி நேற்று (17ம் தேதி) நடந்தது. இதையொட்டி  சந்திமறித்தம்மன் கோயிலில் அம்மனுக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சந்திமறித்தம்மன் கோயில்  முன்பிருந்து ஐயப்ப சப்பர பவனி துவங்கியது. சுவாமி ஐயப்பன் படம் மலர்களால்  அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி முக்கிய சாலைகள் மற்றும் வீதிகள் வலம் வந்தது. இதில் குருசாமிகள் பெருமாள், மணி  தலைமையில் ஐயப்ப பக்தர்கள் திரளாகப் பங்கேற்றனர். வீதிகள் தோறும் வலம்வந்த ஐயப்பரை பக்தர்கள் வழிநெடுகிலும் வரவேற்று தரிசித்தனர். இதே போல்  தச்சநல்லூர் உச்சினி மாகாளி அம்மன் கோயிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில்  சிறப்பு பஜனை நடந்தது.

Related Stories: