புலியூர்குறிச்சி தர்மசாஸ்தா கோயிலில் காவடி திருவிழா

நாகர்கோவில்: புலியூர்குறிச்சி ஸ்ரீதர்மசாஸ்தா கோயிலில் குமாரகோவில் திருமுருகன் பக்தர்கள் சங்கம் நடத்தும் காவடி திருவிழா இன்று தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமம், மதியம் 12 மணிக்கு தீபாராதனை, 12.30 மணிக்கு அன்னதானம், மாலை 6 மணிக்கு சாஸ்தா வழிபாடு,6.30 மணிக்கு நையாண்டி மேளம்,இரவு 8 மணிக்கு காவடி அபிஷேகம், காவடி பூஜை நடக்கிறது. இரவு 10 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. நாளை(14ம்தேதி) காலை 6 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு காவடி பவனி நடக்கிறது. காவடி பவனி தர்மசாஸ்தா சன்னதி, அழகரம்மன் கோயில் தெரு, இல்லத்தார் தெரு, புலியூர்குறிச்சி வழியாக குமாரகோவில் சென்றடையும். இக்கோயிலில் மாதத்தின் அனைத்து ஆயில்யம் தினத்தன்றும் நாகராஜா சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினர் செய்துள்ளனர்.

Related Stories: