மஹா உற்சவ விழா: பெண்கள் விளக்கு ஏந்தி ஊர்வலம்

ஈரோடு: ஈரோட்டில் ஹரிஹரசுதன் ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் திருவிளக்கு பூஜை மற்றும் மஹா உற்சவ விழா ஊர்வலம் நடந்தது. இதையொட்டி ஈரோடு வ.உ.சி. பூங்கா அருகே உள்ள ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் விளக்கு ஏந்தி ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் மூலப்பட்டறை, கேஎன்கே., ரோடு, கருங்கல்பாளையம் வழியாக அங்குள்ள பெரிய மாரியம்மன் கோவிலில் நிறைவடைந்தது. அதன்பின்னர் பெரிய மாரியம்மன் கோவிலுக்கு அருகில் அமைக்கப்பட்டு உள்ள ஐயப்பன் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Advertising
Advertising

Related Stories: