கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மல்லுவுட் நடிகர்கள்

சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் ஜோஜு ஜார்ஜ், சுஜித் சங்கர் ஆகிய மலையாள நடிகர்கள் நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இதில் சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பார் எனத் தெரிகிறது. இதில் முக்கிய வேடத்தில் நடிக்க ஜோஜு ஜார்ஜ் தேர்வாகியிருந்தார். இந்நிலையில் மற்றொரு மலையாள நடிகரான சுஜித் சங்கரும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் அஜித்துடன் நேர்கொண்ட பார்வை, சிம்பு நடித்த மஹா, சமீபத்தில் ரசவாதி ஆகிய படங்களில் நடித்திருந்தார். இப்படத்தில் சுஜித் சங்கர் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை துறைமுகத்தில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்ததாக அந்தமானில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.

மேலும் இப்படத்தில் கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். ஜாக்சன் கலை இயக்கம். பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பு ெசய்கிறார். ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவு. 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

The post கார்த்திக் சுப்புராஜ் படத்தில் இணைந்த மல்லுவுட் நடிகர்கள் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: