நான் இப்படி நடித்தது இதுவே முதல் முறை: சீரன் பட நடிகை இனியா பேச்சு

துரை கே.முருகன் இயக்கத்தில், தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக் ஜோடியாக ‘சீரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார் இனியா. அவர் கூறுகையில், ‘இப்படத்தில் நான் பூங்கோதை என்ற கேரக்டரில் நடித்துள்ளேன். இதில் ஏற்றிருக்கும் கேரக்டருக்காக உடல் எடையை அதிகரித்து, பிறகு குறைத்து நடித்துள்ளேன். இதுபோல் நான் நடிப்பது இதுவே முதல்முறை. ஜேம்ஸ் கார்த்திக் பாடல் காட்சிகளில் நடிக்கும்போது மிகச்சிறப்பாக ஆடியுள்ளார். அவர் ஒரு திறமையான தயாரிப்பாளர் மற்றும் நல்ல நடிகராக வெற்றிபெறுவார் என்று நம்புகிறேன். அவரைப் பார்த்து நானும் சில தயாரிப்புப் பணிகளும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். இயக்குனர் துரை கே.முருகன் அதிக பக்குவம் நிறைந்தவர்.

அவருக்கு என்ன தேவை என்பதில் தெளிவாக இருந்தார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எதிர்பாராவிதமாக சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், எந்த விஷயமும் இப்படத்தின் பணிகளைப் பாதிக்காத வகையில் கஷ்டப்பட்டு சிறப்பாக இயக்கினார். அதுபோல், ஒளிப்பதிவாளரும் மிகச்சிறப்பாக உழைத்துள்ளார்’ என்றார். சோனியா அகர்வால் கூறும்போது, ‘இப்படம் சமூக அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. கடந்த 2004ல் ஹரி இயக்கத்தில் சிம்பு ஜோடியாக நான் நடித்த ‘கோவில்’ என்ற படத்துக்குப் பிறகு இதில் நான் கிராமத்து கேரக்டரில் நடித்துள்ளேன்’ என்றார். அருந்ததி நாயர் கூறுகையில், ‘நான் மேடையில் பேசி நீண்ட நாட்களாகி விட்டது.

இப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் நடித்துள்ளேன். ஆனால், கதைக்கு அது ஒரு முக்கியமான கதாபாத்திரம். கண்டிப்பாக அனைத்து ரசிகர்களுக்கும் அந்தக் கேரக்டர் பிடிக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். க்ரிஷா க்ரூப் கூறும்போது, ‘இப்படத்தின் கதையை என்னிடம் இயக்குனர் எப்படி சொன்னாரோ அப்படியோ உருவாக்கியுள்ளார். இதில் என்னை யாழினி என்ற கேரக்டரில் நடிக்க தேர்வு செய்த அவருக்கு நன்றி. அப்பாவி கிராமத்துப் பெண்ணாக நடித்துள்ளேன். என்னுடன் நடித்த ஆஜித் நிறைய உதவிகள் செய்தார். படப்பிடிப்பில் நடிப்பு சம்பந்தமாக அவர் எனக்குக் கொடுத்த ஒத்துழைப்பை மறக்க முடியாது. இனியாவுடன் இணைந்து நடித்ததும் எனக்கு மிக நல்லதொரு அனுபவமாக இருந்தது. தனது கேரக்டரை எப்படி அவர் ெமருகேற்றி நடிக்கிறார் என்பதை நேரில் பார்த்து வியந்தேன்’ என்றார்.

The post நான் இப்படி நடித்தது இதுவே முதல் முறை: சீரன் பட நடிகை இனியா பேச்சு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: