ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை

சென்னை: தமிழில் ‘சிலந்தி’, ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’, கன்னடத்தில் ‘ரணதந்த்ரா’ ஆகிய படங்களை எழுதி இயக்கியவர், ஆதிராஜன். தற்போது அவர் கோல்டன் மேஜிக் கிரியேட்டர் சார்பில் எழுதி இயக்கி, ஏ.சூர்யாவுடன் இணைந்து தயாரித்துள்ள படம், ‘தீராப்பகை’. இதில் கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜய ராகவேந்திரா, ஹரிப்பிரியா, ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார், ஆத்ரிகா ரமேஷ் நடித்துள்ளனர். ஒரு பாடலுக்கு மேக்னா நாயுடு ஆடியுள்ளார். ராஜேஷ் கே.நாராயண் ஒளிப்பதிவு செய்ய, எம்.ஜி.கார்த்திக் இசை அமைத்துள்ளார். ‘கேஜிஎஃப்’ காந்த் கவுடா எடிட்டிங் செய்துள்ளார். சினேகன், ஆதிராஜன் பாடல்கள் எழுதியுள்ளனர்.

படம் குறித்து ஆதிராஜன் கூறுகையில், ‘சென்னை, பெங்களூரு, கோவை ஆகிய பகுதிகளில், ஒரே பாணியில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இது கொலையா, தற்கொலையா? அமானுஷ்ய விஷயமா என்று முடிவுக்கு வர முடியாமல் காவல்துறை திணறுகிறது. விசாரணை தீவிரம் அடையும் நிலையில், அதிர்ச்சியான மர்மம் ஒன்று வெளியாகிறது. அதீத சுதந்திரத்தாலும், நாகரீக மோகத்தாலும் பெண்கள் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்பதை மையப்படுத்தி படம் உருவாகியுள்ளது. படப்பிடிப்புக்கு 6 டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. திரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் முழுமையான விருந்தாக இருக்கும்’ என்றார்.

The post ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: