கௌதம் மேனன், ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட “மூன்றாம் கண்” பர்ஸ்ட் லுக் !!

டிரெண்டிங் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் கே .சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைப்பர்லிங்க் க்ரைம் திரில்லராக உருவாகும் திரைப்படம் “மூன்றாம் கண்”. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கௌதம் மேனன், நட்சத்திர நடிகர் ஆர்யா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் வெளியிட்டனர்.

ஒரு சம்பவம் அதன் தொடர்ச்சியாக நிகழும் பல நிகழ்வுகள் என, ஹைப்பர்லிங்க் பாணியில் நான்கு கதைகள் இணைந்ததாக, இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கொலையும் அதைச்சுற்றி நடக்கும் நான்கு சம்பவங்களும், பரபரப்பான திருப்பங்களுமாக, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, சுந்தரா டிராவல்ஸ் ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர். வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்குகிறார்.

கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் என்.எஸ். உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அசுரன், விடுதலை படப்புகழ் ஆர் .ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளைக் கவனிக்கிறார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்கிறார். பின்னணி இசைக்கோர்வையை ராஜ்பிரதாப் செய்கிறார். யானை படப்புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்குக் கலை இயக்கம் செய்கிறார். விரைவில் போஸ்ட் புரடக்சன் துவங்கவுள்ள இப்படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூரவமாக வெளியாகும்

The post கௌதம் மேனன், ஆர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட “மூன்றாம் கண்” பர்ஸ்ட் லுக் !! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: