இதில் ஜெயம் ரவி போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். இதற்கு முன்பு சில படங்களில் அவர் போலீசாக நடித்திருந்தாலும் கூட, இதில் முற்றிலும் மாறுபட்ட போலீசாக வருகிறார். இதுவரை யாரும் இதுபோல் நடித்ததில்லை என்று சொல்ல முடியும். ஹீரோவுக்கு நிகராக நயன்தாரா நடித்தார் எனினும், அவரது ரோல் பற்றி இப்போது சொல்ல முடியாது. காரணம், இப்படத்தில் மிகவும் திருப்புமுனையாக அமைந்திருப்பதே அவரது கேரக்டர்தான். இதற்கு முன்பு அவர் இதுபோன்று நடித்ததில்லை. கொடூர வில்லனாக ராகுல் போஸ் நடித்துள்ளார். மர்டர் மிஸ்ட்ரி பாணியில், சைக்கோ கிரைம் திரில்லர் கதையுடன் உருவான இப்படத்தின் டிரைலரைப் பார்த்தவர்கள், ‘ராட்சசன்’ படத்துடன் ஒப்பிடுகின்றனர். பெண்களைக் கொலை செய்யும் ஒரு சைக்கோ கொலையாளியை வலைவீசி தேடும் போலீஸ் ஜெயம் ரவி சந்திக்கும் பிரச்னையை சொல்லும் இப்படம், வரும் 28ம் தேதி வெளியாகிறது.
The post சைக்கோ கொலையாளியை தேடும் ஜெயம் ரவி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.