‘அடியே’ படத்தின் கதையும், காட்சிகளும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். இது வழக்கமான படம் இல்லை. பியூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்ஷன் லவ் ஸ்டோரி. இதை திரையில் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சென்னையில் பனி மழை பொழியும் என்று கதையில் இருக்கும். அதை படக்குழு திரையில் நேர்த்தியாக செய்து காட்டியது. படப்பிடிப்பில் வெங்கட் பிரபுவுடன் இசை தொடர்பாக விவாதிப்போம். சமீபத்தில் நான் பணியாற்றியதில் மிகச்சிறந்த தயாரிப்பு நிறுவனம் இது. இந்த நாளில், இந்த தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றால் உறுதியாக நடக்கும். நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் என்பதால், மீண்டும் இந்த நிறுவனத்துடன் பணியாற்ற விரும்புகிறேன். நடிப்பைப் பொறுத்தவரை கவுரி கிஷன், மதும்கேஷ் இருவரும் அற்புதமாக நடித்துள்ளனர்.
The post சயின்ஸ் ஃபிக்ஷன் லவ் ஸ்டோரியில் நடித்தது ஏன்?: ஜி.வி.பிரகாஷ் குமார் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.